1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 நவம்பர் 2022 (17:26 IST)

பஞ்சாபில் துப்பாக்கி சூடு: சிவசேனா மூத்த தலைவர் பலி!

gunshot
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் என்ற பகுதியில் சாமி சிலையை குப்பையில்  வீசியதை கண்டித்து சிவசேனா சார்பில் போராட்டம் நடைபெற்றது 
 
இந்த போராட்டம் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சுதிர் சூரி என்பவரின் தலைமையில் நடைபெற்ற நிலையில் திடீரென போராட்டத்தின் இடையே மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் 
 
இதில் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸ் அதிகாரியுடன் அவர் பேசிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது 
 
இது குறித்து துப்பாக்கி சூடு நடத்தியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர், இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva