1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (12:31 IST)

நவம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 
ஆம், வரும் நவம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அன்றில் இருந்து நவம்பர் 30 ஆம் தேதி வரை வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யவோ அல்லது பெயர் நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத்தொடர்ந்து டிசம்பர் 20 ஆம் தேதி ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.