திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (10:11 IST)

திருப்பதி வெங்கடாஜலபதியால் சனிக்கிழமை ரிலீஸாகும் டாக்டர்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படம் அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் இப்போது அக்டோபர் 9 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறது. வழக்கமாக திரைப்படங்கள் வெள்ளிக்கிழமைதான் ரிலீஸ் ஆகும். அல்லது ஒரு நாள் முன்னதாக வியாழக்கிழமை ரிலீஸாகும்.

அப்போதுதான் வார இறுதிநாள் கலெக்‌ஷனை அள்ளலாம். ஆனால் டாக்டர் திரைப்படம் இதையெல்லாம் மீறி டாக்டர் திரைப்படம் சனிக்கிழமை ரிலீஸாவதற்குக் காரணம் திருப்பதி வெங்கடாஜலபதிதானாம். 9 என்ற எண்ணுக்கு அவருக்கு உகந்தநாள் என்பதால் அவரின் தீவிர பக்தரான கே ஜே ஆர் ராஜேஷ் வெள்ளிக்கிழமை கலெக்‌ஷன் போனால் கூட பரவாயில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளாராம்.