திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (12:04 IST)

திருப்பதியில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிஷனம் - வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. 
 
இந்நிலையில் காதலன் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது ரங்கநாயக மண்டபத்தில்  தேவஸ்தான  அதிகாரிகள் அவர்களுக்கு பிரசாதங்கள் வழங்கினர். அங்கிருந்த ரசிகர்கள் நயன்தாரவை பார்த்ததும் ஓடிவந்து செல்பி எடுத்துக்கொண்டனர். நயன்தாராவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு பாதுக்காப்பாக அழைத்து செல்லும் விக்கி காதலை பலரும் பாராட்டி இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.