1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (11:51 IST)

ரூ.2 கோடியே 77 லட்சம் - ஒரே நாளில் ஏழுமலையான் மெகா வசூல்!

நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 77 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் தினமும் 2 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
 
இந்நிலையில் திருப்பதியில் சமீபத்தில் அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசனம் தொடங்கியது. நாள்தோறும் இரவு 11.30 வரை 8,000 பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி அளித்துள்ளது. பக்தர்கள் தங்களது ஆதார் கார்டுகளை காண்பித்து இலவச தரிசன டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்தது.  
 
இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக 20,000 மேற்பட்ட பக்தர்கள் அங்கு குவிந்தனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தை போல உண்டியலில் போடப்பட்ட காணிக்கையின் தொகையும் அதிகரித்துள்ளது. ஆம், நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.2 கோடியே 77 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.