நிலத்தை விற்ற விவசாயி… ஒரு வாரத்தில் கிடைத்த தங்கப் புதையல்!

Last Updated: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:25 IST)

ஆந்திராவில் விவசாயி ஒருவர் நிலத்தை விற்ற நிலையில் அதில் ஒரு வாரத்துக்குப் பின்னர் புதையல் கிடைத்துள்ளது.

தெலங்கானாவில் உள்ள பெம்பார்த்தி என்ற பகுதியில் விவசாயி ஒருவர் நிலத்தில் பெரிதாக வருவாய் இல்லாததால் அந்த நிலத்தை ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் ஒருவரிடம் விற்பனை செய்துள்ளார். அதையடுத்து ஒரு வாரத்தில் அவர் நிலத்தை ஜேசிபி எந்திரம் வைத்து சமப்படுத்திய போது
5 கிலோ மதிப்புள்ள தங்கப் புதையல் கிடைத்துள்ளது.

இந்த செய்தி ஊர்மக்கள் வழியாக போலிஸாருக்கு செல்லவே அவர்கள் வந்து புதையலை பறிமுதல் செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :