விவசாயிகளிடம் வாக்குகள் சேகரித்த...அதிமுக வேட்பாளர்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முத்துக்குமார் துவரை விவசாயிகளிடம் வாக்குகள் சேகரித்தார்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் மூக்கனாங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட அருமைகாரன்புதூர் பகுதியில் விவாசயிகள் துவரையை அறுவடை செய்து கொண்டிருந்தனர் அப்பொழுது வேட்பாளர் முத்துக்குமார் நேரில் விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தார் மேலும் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார் பின்னர் பொதுமக்களிடையே விவசாயிகளின் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மீண்டும் முதல்வரானால் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் விரைவில் தீர்க்கப்படும் அதற்காக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று வாக்குகள் சேகரித்தார்.