செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (11:13 IST)

நடுரோட்டில் நிர்வாணமாக டான்ஸ் ஆடிய திருநங்கைகள்

டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் திருநங்கைகள் ஒன்றுகூடி நிர்வாணமாக டான்ஸ் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் டெல்லியில் புதிதாக சிக்னேச்சர் என்ற பாலம் திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
 
இந்நிலையில் சமீபத்தில் இந்த பாலத்தின் மையப் பகுதிக்கு சென்ற சில திருநங்கைகள் தங்களது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக டான்ஸ் ஆடியுள்ளனர். முகம் சுழித்தவாறே அவ்வழியாக சென்ற மக்கள் அதனை கடந்து சென்றனர்.
 
இதனை வீடியோ எடுத்த நபர் அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தார். இந்த விஷயம் போலீஸாரின் கவனத்திற்கு செல்லவே இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள போலீஸார், இந்த கேவலமான செயலில் ஈடுபட்ட திருநங்கைகளை தேடி வருகின்றனர்.