செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (10:50 IST)

சம்பளம் தரமாட்டியா? பெண் முதலாளியை போட்டுத்தள்ளிய தொழிலாளி

சம்பள பாக்கி பிரச்சனையில் தொழிலாளி ஒருவர் பெண் முதலாளியை குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லி வசந்த்குஞ்ச் பகுதியை சேர்ந்தவர் மாலா லகானி (53). ஆடை வடிவமைப்பாளரான இவர் தனியாக தொழில் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் ராகுல் என்பவர் வேலை செய்து வந்தார்.
 
மாலா ராகுலுக்கு நீண்ட நாட்களாக சம்பளம் தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ராகுல் மாலாவிடம் கேட்டபோது, நீ ஒழுங்காக வேலை செய்யவில்லை என காட்டமாக பேசியிருக்கிறார்.
 
இதனால் ஆத்திரமடைந்த ராகுல் தனது நண்பரை கூட்டிக்கொண்டு, மாலாவிடம் சென்றுள்ளார். தனது சம்பள பாக்கியை தாருங்கள் என கேட்டுள்ளார் ராகுல். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ராகுல் தனது நண்பரோடு சேர்ந்து, மாலாவை குத்தி கொலை செய்துள்ளார்.
 
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மாலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ராகுலையும் அவனது நண்பனையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.