திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 11 நவம்பர் 2018 (19:09 IST)

கிளப்பு... மப்பு... நள்ளிரவில் இளம் பெண்ணால் கோர விபத்து

டெல்லியில் இலம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் கார் ஓட்டு வந்து மற்றொரு கார் மீது மோதியில் பெண் ஒருவர்ர் பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஷிவானி மாலிக் என்ற பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருடன் கிளப்புக்கு சென்று விட்டு இரவு 11 மணியளவில் திரும்பிக் கொண்டிருந்தார். மது அருந்திவிட்டு ஷிவானி காரை வேகமாக இயக்கியதால் மேம்பாலம் அருகே எதிரே வந்த கார் மீது மோதியது. 
 
எதிரே வந்த காரில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடுத்திரும்பிக்கொண்டிருந்தனர். விபத்தில் நான்கு பேரும் பலத்த காயம் அடைந்தனர். 
 
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 38 வயதான பெண் மரணமைடந்தார். விபத்து நடந்த உடன் ஷிவானியுடன் வந்த ஆண் நண்பர்கள் தப்பியோடி விட்டனர்.
 
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து ஷிவானியை கைது செய்தனர். மேலும் அவரின் இரு ஆண் நண்பர்களை தேடி வருகின்றனர்.