ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

கொரோனா 2வது அலை தொடங்கிவிட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இரண்டாவது அலை பரவி விட்டதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் இரண்டாவது அலை தொடங்கிவிட்டதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து அவர் கூறியபோது கொரோனா இரண்டாவது அலை தொடங்கி விட்டதாகவும் நோய் பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார் 
 
மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் அவ்வாறு அவசியமாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் பொது மக்கள் ஒருவருக்கொருவர் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்