இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே
இந்த ஊரடங்கின்போது வாகனங்கள் அனுமதி இல்லை என்றும் எந்தவித வாகனப் போக்குவரத்தும் இருக்கக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கின்போதும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ரயில்கள் இயங்குமா? என்று பொது மக்கள் மனதில் சந்தேகம் எழுந்து உள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள தென்னக இரயில்வே தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவித்துள்ளது
இதனை அடுத்து ரயில்களுக்கு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடு பொருந்தாது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது ரயில் நிலையம் விமான நிலையங்களுக்கு மட்டும் செல்ல ஆட்டோ, கார்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது