தமிழகத்தில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு தேவை! – முதல்வரிடம் வலியுறுத்துவதாக தகவல்!

Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (12:49 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து 10 நாட்கள் ஊரடங்கி விதிக்க ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா இரண்டாம் அலை கைமீறி செல்வதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முன்னதாக புதிய கட்டுப்பாடுகள் சில அறிவிக்கப்பட்டன.

ஆனாலும் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களாவது முழு ஊரடங்கு விதித்தால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ நிபுணர்கள் முதல்வரிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :