திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

புறப்பட்ட சில நிமிடங்களில் ரயில் விபத்து: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி

train acci
புறப்பட்ட சில நிமிடங்களில் ரயில் விபத்து: மேற்குவங்கத்தில் அதிர்ச்சி
மேற்கு வங்க மாநிலத்தில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அசான்கோல் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
 
அசான்கோல் - பொக்கரோ இடையே இயக்கப்படும் இந்த ரயில் புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே தடம்புரண்டது.  தடம்புரண்ட பெட்டிகள் 40 பயணிகள் இருந்ததாகவும் ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
 ரயில் விபத்து காரணமாக அந்த பகுதி வழியாக செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்கள் தாமதமாக சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன