வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (10:34 IST)

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்.. பிப்ரவரி 1ல் பட்ஜெட்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

new parliament  India
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை கூட இருப்பதாகவும் நாளை மறுநாள் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் நாடாளுமன்றத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பாதுகாப்பு ஏற்பாடு குளறுபடிகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. எனவே இம்முறை கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

 
இந்த நிலையில் நாளை மறுநாள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் வருமானவரி சலுகை உள்பட பல சலுகைகள் இருக்கும் என்றும் தேர்தலை மனதில் வைத்து பல சலுகைகளை அறிவிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  
 
நாளை மறுநாள் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் முடிவடைந்து அமையப் போகும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran