ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 29 ஜனவரி 2024 (07:39 IST)

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் கைகலப்பு.. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி எம்பிக்கள் மோதியதால் பரபரப்பு..!

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மோதி கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பிரதமர் மோடி குறித்து  மாலத்தீவு ஆளுங்கட்சி எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதனை அடுத்து இந்தியர்கள் யாரும் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல மாட்டோம் என்று கூறியதும் அந்நாட்டு அமைச்சர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் மாலத்தீவு நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்கும் சிறப்பு கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
மேலும் பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுக்கும் வகையில் சபாநாயகரின் அருகே சென்று ஒரு எம்பி பீப்பி ஊதிய புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva