மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்: கொரோனா பரவல் குறித்து ஆலோசனை!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரப்பி விட்டதாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள நிலையில் தற்போது பிரதமர் மோடி நாளை மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. நாளை அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நாடு முழுவதும் ஒரு சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் கிட்டத்தட்ட மினி ஊரடங்கு போல அந்தக் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது