ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 ஏப்ரல் 2022 (12:46 IST)

கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்வு: குறைந்த கட்டணம் ரூ.10 என அறிவிப்பு!

kerala bus
கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்த்த படுவதாகவும் குறைந்த கட்டணம் எட்டு ரூபாயிலிருந்து 10 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் கேரள மாநில போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது
 
பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக கேரளாவில் பேருந்து ஆட்டோ டாக்சி கட்டணம் உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது
 
கேரள அரசு பேருந்துகளில் தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 8 ஆக இருந்து வரும் நிலையில் இனி 10 ரூபாய் ஆக மாற்றப்படும் என்றும் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாயாகவும் டாக்சிகளில் குறைந்த கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 
 கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவே இந்த கட்டண உயர்வு என்றும் கேரள மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது 
 
கேரளாவில் அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளே அதிகம் இருக்கும் நிலையில் பேருந்து கட்டண உயர்வால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்