1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 28 ஏப்ரல் 2022 (12:26 IST)

கேரளாவில் பரவும் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஷிகெல்லா பாக்டீரியாவால் 2 சிறுமிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

 
ஆம், கடந்த 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் 2 சிறுமிகளுக்கு இந்த தொற்று அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது என கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு இதே போல ஒரு குழந்தைக்கு ஷிகெல்லா காய்ச்சல் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து 6 பேருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு ஷிகெல்லா பாக்டீரியா தொற்று கட்டுப்படு்த்தப்பட்டது. என்வே த்ற்போதும் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்து வருகிறது. 
 
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகியவை ஷிகெல்லா நோய் தொற்றின் பொதுவான அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன.