திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 2 மே 2022 (09:41 IST)

சவர்மா சாப்பிட்ட மாணவி மரணம்.. பலர் மருத்துவமனையில்..! – கேரளாவில் அதிர்ச்சி!

Sawarma
கேரளாவில் ஒரு கடையில் சவர்மா சாப்பிட்ட பலர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூரில் பேருந்து நிலையம் அருகே ஐடியல் ஸ்னாக்ஸ் என்ற உணவகம் செயல்பட்டு வந்துள்ளது. அங்குள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பலர் பள்ளி முடிந்து பேருந்துக்கு காத்திருக்கும்போது அந்த உணவகத்தில் சவர்மா உள்ளிட்டவற்றை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அந்த கடையில் சவர்மா சாப்பிட்ட மாணவர்கள் 15 பேர் உட்பட மொத்தம் 30 பேர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சவர்மா சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி தேவநந்தா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அந்த உணவகத்தை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.