ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 6 அக்டோபர் 2024 (10:03 IST)

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

toilet
இமாச்சலப் பிரதேச மாநில அரசு சமீபத்தில், கழிப்பறை வரி விதித்த நிலையில், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை தொடர்ந்து, அந்த வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வரும் நிலையில், சமீபத்தில் ஜல்சக்தி துறை வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் 1 முதல், சொந்தமாக தண்ணீர் வசதி இருந்து, கழிப்பறை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு கழிப்பறைக்கும் தலா 25 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் விமர்சனம் செய்தனர். இதனை பொதுமக்களும் எதிர்த்து, காட்டும் எதிர்ப்பினால் வேறு வழியில்லாமல் தற்போது கழிப்பறை வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கழிப்பறை வரி உத்தரவு திரும்ப பெறப்பட்டதாக, இமாச்சலப் பிரதேச அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



Edited by Siva