1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 3 அக்டோபர் 2024 (09:24 IST)

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு Ex காங்கிரஸ் தலைவர் k.s. அழகிரி தலைமையில் மௌன ஊர்வலம்!

காந்தி ஜெயந்தி முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
 
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியது......
 
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி நியமித்ததை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் நிதி துறை மந்திரி நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை நான் வரவேற்கிறேன் பாரதிய ஜனதா கட்சி தொழில் அதிபர்களை மிரட்டி கட்சிக்கு பணம் பெற்றுள்ளது அந்த பணத்தை வெள்ளை பணமாக மாற்றியுள்ளார்கள்.
 
இந்தியா ஒரு அகிம்சை நாடு அதனால் தான் நாம் மகாத்மா காந்தியை கொண்டாடுகிறோம் உலகிலேயே அதிக சிலை உள்ள தலைவர் மகாத்மா காந்தி மட்டும் தான் பாகிஸ்தான் நாளுக்கு நாள் நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது உலக வங்கியை எதிர்பார்த்துதான் இன்று பாகிஸ்தான் இருக்கிறது அங்கே அகிம்சை இல்லை என்று கூறினார்.