ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 20 ஏப்ரல் 2019 (08:27 IST)

‘மை‘ அழிந்ததால் தேர்தல் ஆணையம் மீது போலீசில் புகாரளித்த நபர்!!

கையில் வைத்த ‘மை‘ அழிந்ததால், பெங்களூரை சேர்ந்த வாக்காளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
 
பெங்களூருவை சேர்ந்தவர் பிரிக்சித் தலால்(43). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அவர் நேற்று முன்தினம் பெங்களூரு மாநகராட்சி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
 
இதற்காக அவரது கை விரலில் ஊழியர்கள் வைத்த 'மை', அவர் வீட்டுக்கு வந்த சாப்பிடுவதற்காக கையை சோப்பு போட்டு கழுவியபோது அழிந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தான் வாக்களித்த வாக்குச்சாவடிக்கு சென்று 'மை' அழிந்தது பற்றி அங்கிருந்த அதிகாரிகளிடம் பிரிக்சித் தலால் கூறினார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
 
இதனால் காவல் நிலையத்துக்கு சென்று தேர்தல் ஆணையத்தின் மீது அவர் புகார் கொடுத்தார். அதில், வாக்களித்த பின் விரலில் வைக்கப்படும் 'மை' குறைந்தது 2 வாரங்கள் அழியாமல் இருக்கும். ஆனால் தனது விரலில் வைக்கப்பட்ட 'மை' உடனடியாக அழிந்து விட்டது, எனவே தேர்தல் ஆணையம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அதன்பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.