வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (10:45 IST)

காதலிக்கு காத்திருந்த பரிசு; ரூ.3.68 லட்சத்தை அபேஸ் செய்த காதலன்!

மும்பையில் பெண் ஒருவரை காதலிப்பதாக ஏமாற்றி ரூ.3.68 லட்சத்தை அபேஸ் செய்த போலிக் காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

மும்பையை சேர்ந்த திருமணமான 51 வயது பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலமாக அலெக்ஸ் என்ற நபருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் அடிக்கடி பேசி வந்த நிலையில் அலெக்ஸுக்கு தனது புகைப்படத்தையும் ஷேர் செய்து வந்துள்ளார் அந்த பெண்மணி.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு அந்த பெண்ணுக்கு பரிசு அனுப்பியுள்ளதாக அலெக்ஸ் கூறியுள்ளார். காதலனின் காதல் பரிசுக்காக ஆர்வமாக காத்திருந்துள்ளார் அந்த பெண். பின்னர் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக தொடர்பு கொண்ட நபர் கூடுதல் எடையுடன் பார்சல் இருப்பதால் ரூ72 ஆயிரம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். பெண்மணியும் செலுத்தியுள்ளார்

பின்னர் மீண்டும் வந்த அழைப்பில் காதல் பரிசில் யூரோ பணக்கட்டுகள் இருப்பதாகவும் சுங்கதுறைக்கு இந்த தகவல் செல்லாமல் இருக்க ரூ.2.65 லட்சம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். பயந்து போன அந்த பெண்மணி அந்த தொகையையும் தந்துள்ளார். பின்னர் மீண்டும் பணம் கேட்டு போன் வரவே தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார்.

இதை வெளியே சொன்னால் பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக அலெக்ஸ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பணம் பறித்த சைபர் க்ரைம் கும்பலை தேடி வருகின்றனர்.

Edit by Prasanth.K