திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (10:48 IST)

நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி!

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 
 
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.‌ 
 
அந்த வகையில் நம் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. மக்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில்  தடுப்பூசி போட்டுக்  கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் இதுவரை சுமார் 5 கோடி பேருக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.