1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified வியாழன், 1 ஏப்ரல் 2021 (08:03 IST)

விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த நாடு எது தெரியுமா?

விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது.

 
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.‌ மனிதர்கள் மட்டுமின்றி  விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை ரஷியாவின் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கான மத்திய ஆணையம் உருவாக்கியுள்ளது.