செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 நவம்பர் 2021 (09:27 IST)

முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கள் 6 மாதங்கள் செல்லும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அதே டிக்கெட்டை பயன்படுத்தி தரிசனம் செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

 
திருப்பதி உள்பட ஆந்திராவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் தரிசனத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தால் அதை ஆறு மாதங்களுக்குள் வேற ஒரு தேதியில் தரிசனம் செய்து கொள்ளலாம் என்றும் இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மாற்றம் செய்யப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது