வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (07:16 IST)

ரூ.90ஐ நெருங்கும் பெட்ரோல் விலை: முடிவே இல்லையா?

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே இருப்பதற்கு முடிவே இல்லை என்று பொதுமக்கள் புலம்பி வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை 14 காசுகளூம், டீசல் விலை 10 காசுகளும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை 10 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய கமாடிட்டி மார்க்கெட்டி கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை தவிர்க்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் மத்திய, மாநில அரசுகள் வரிகளை குறைத்து பொதுமக்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், சமூக நல ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.