புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (18:41 IST)

பெட்ரோல் விலை ரூ.100-ஐ தொட்டால் பங்க்குகளின் நிலை என்னவாகும்?

பெட்ரோல், டீசல் விலை ரூ.100 தொட்டால், பெட்ரோல் பங்க்குகள் மூட வேண்டிய நிலை வரும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது. தற்போது, பெட்ரோலின் விலை மும்பையில் லிட்டருக்கு ரூ.90.08க்கும், டெல்லியில் ரூ. 82.27, கொல்கத்தாவில் ரூ.85.54, சென்னையில் ரூ.85.99க்கும் விற்பனையாகிறது. 
 
டீசல் ஒரு லிட்டர் மும்பையில் ரூ.78.58, டெல்லியில் ரூ.74.02, கொல்கத்தாவில் ரூ.75.87, சென்னையில் ரூ.78.26 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில், பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கடுப்பாகியுள்ளனர். 
 
ஆம், தற்போது நடைமுறையிலுள்ள பெட்ரோல், டீசல் வினியோக மீட்டர்கள் மத்திய அரசு அறிவுறுத்தல்படி செயல்பட்டு வருகின்றன. அதாவது, மீட்டரில் புள்ளிக்கு இடதுபுறம் இரு எண்கள், வலதுபுறம் இரு எண்கள் இடம்பெற முடியும். 
 
ஆனால், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ.100-ஐ தாண்டினால், மீட்டர்களை மாற்றியமைக்க வேண்டி வரும். அப்போது சில பெட்ரோல் பங்க்குகளை மூட வேண்டிய நிலை ஏற்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.