புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (07:13 IST)

மீண்டும் உச்சத்தில் பெட்ரோல்-டீசல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல்-டீசல் விலை விஷம் போல் ஏறிக்கொண்டிருப்பதால் ஷேர் ஆட்டோ கட்டணம் உள்பட பல கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்திருந்தாலும் மத்திய, மாநில அரசுகள் வரியினை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தலாம். ஆனால் இரு அரசுகளும் இதனை செய்ய மறுப்பதால் பொதுமக்கள் சிரமத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 6 காசுகள் அதிகரித்து விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பெட்ரோல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் பாஜக தனது ஆட்சியை இழக்க வேண்டிய நிலை வரும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.