புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 செப்டம்பர் 2018 (15:22 IST)

இப்படி ஒரு விளம்பரமா? - கேக் வாங்குனா ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்

எங்களிடம் கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என ஒரு இனிப்பு கடை நிர்வாகம் வைத்துள்ள பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

 
தற்போது நாட்டில் உள்ள அனைவருக்கும் முக்கிய பிரச்சனையாக இந்த பெட்ரோல் விலை இருக்கிறது. நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தற்போது ரூ.85 ஐயும் தாண்டி விட்டது. இப்படியே சென்றால் விரைவில் ஒரு லிட்டரின் பெட்ரோலின் விலை ரூ.100 தொடும் என பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில், வேலூரில் சாலையோரத்தில் ஒரு விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு கிலோ கேக் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பெட்ரோலின் விலை ஏற்றத்தில் வாடும் வாகன ஓட்டிகள் இந்த விளம்பரத்தை சிரிப்பதா இல்லை அழுவதா எனப்புரியாமல் கடந்து செல்வதாக கேள்வி...