1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (08:30 IST)

காவிரி வழக்கில் இன்று தீர்ப்பு எதிரொலி: கர்நாடகா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி பிரச்சனை குறித்த முக்கிய வழக்கின் தீர்ப்பை இன்று டெல்லி சுப்ரீம் கோர்ட் வழங்கவுள்ளது. இந்த தீர்ப்பு இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இருப்பினும் இந்த தீர்ப்பு வெளிவந்தவுடன் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் இன்று காலை முதல் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து பெங்களூர் செல்லும் பேருந்துகள் ஓசூர் வரை மட்டுமே செல்கின்றன. இதனால் ஓசூரில் இருந்து பொதுமக்கள் கர்நாடக மாநில பேருந்துகளிலும், தனியார் பேருந்துகளிலும் சென்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் தீர்ப்புக்கு பின்னர் இருமாநில எல்லையில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் இருமாநில எல்லையான அத்திப்பள்ளி என்ற இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காவிரி தீர்ப்பு எப்படி இருந்தாலும் கவலையில்லை, தமிழகத்திற்கு கர்நாடகம் தர வேண்டிய நீரை தந்தாக வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்