1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (21:18 IST)

ஆபாச படங்களுக்கு அடிமையான கணவர்: மனைவியின் பாச போராட்டம்!

ஆபாச படங்களுக்கு தன் கணசர் அடிமையாகிவிட்டதாக பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு முன்னர் இதே போல் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த பெண் அளித்துள்ள வழக்கில் பின்வரும் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகவும் எளிதாக ஆபாச படங்கள் கிடைக்கிறது. இணையத்தில் ஆபாச படங்கள் கொட்டி கிடக்கிறது. 
 
இந்த படங்கள் ஆண்களை பாலியல் குற்றம் செய்ய வைக்கிறது. அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் இது பிரச்சனையை உருவாக்குகிறது. பாலியல் ரீதியாக ஆண்களை இந்த படங்கள் சிதைக்கிறது. 
 
என் கணவனும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் எனக்கும் என் கணவனுக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. இந்த சண்டை விவாகரத்து வரை சென்றுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
மேலும், ஆபாச படங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்களை காப்பற்ற வேண்டும். இந்தியாவில் ஆபாச படங்களை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.