1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2018 (11:58 IST)

இது என்னடா! வைரல் நாயகி பிரியா வாரியருக்கு வந்த சோதனை...

இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் நோக்கில் மலையாள நடிகை பிரியா வாரியரின் பாடல் காட்சி  உள்ளதாக, இளைஞர் ஒருவர் ஹைதராபாத் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

 
அண்மையில் வெளியான 'ஒரு அடார் காதல்' மலையாள படத்தின் ப்ரோமோ வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் உள்ள பிரியா பிரகாஷ் இளசுகளின் மத்தியில் குறிப்பாக தமிழக இளைஞர்களின் மனதில் குடியேறினார். தனது முக பாவனை மூலம் அனைவரையும் கவர்ந்து விட்டார். தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் இவர் பிரபலமாகியுள்ளார். இவருக்கென தற்போது ஒரு ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. 
 
இந்நிலையில் பிரியா வாரியர் பாடிய பாடல் இஸ்லாமியர்களின் மனங்களை புண்படுத்திவிட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது, இதனால் அவர் மீது இளைஞர் ஒருவர் ஹைதராபாத் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.