தொடர்புடைய செய்திகள்
- ராமர் கோவில் திறக்கும்போது முஸ்லீம்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம்: சர்ச்சை பேச்சு
- ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை திருமலை திருப்பதி கோவிலில் ஸ்ரீராமர் சிலை திறப்பு
- கலைஞர் 100 விழா- முதல்வருக்கு அழைப்பிதழ்
- ' கலைஞர் 100 விழா '- ரஜினி, கமலுக்கு புதிய அழைப்பிதழ்
- அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு அழைப்பு! - அழைப்பிதழை பெற்று கொண்ட ரஜினிகாந்த்!
ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் 22ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எங்களுக்கு இன்னும் அழைப்பு வரவில்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வருகை தர எனக்கோ, எங்கள் முதலமைச்சருக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்த விழாவில் கலந்து கொள்வது குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் ராம பக்தன், அனுமார் பக்தன், நாங்கள் இங்கிருந்து பிரார்த்தனை செய்கிறோம், எங்கள் பக்தியை நாங்கள் எங்கள் இதயத்தில் வைத்திருக்கிறோம், இதில் அரசியல் செய்ய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
Edited by Siva
