1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Tirupathi devasthana ticket issue from today

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்.. நவம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியீடு

tirupathi
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய நவம்பர் மாததற்கான டிக்கெட் வெளியீடு இன்று நடைபெற்றது என தகவல் வெளியாகியுள்ளன
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் காத்திருக்காமல் ஆன்லைன் மூலம் டிக்கெட் பெறும் வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
 
தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் என ஒரு மாதத்திற்கு 6 லட்சம் பக்தர்களுக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் மாதம் 6 லட்சம் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது
 
மேலும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் ஆர்ஜித சேவை கல்யாண உற்சவம் உள்பட அனைத்து டிக்கெட்டுகளும் இன்று வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் அக்டோபர் மாதத்திற்கான அங்கப்பிரதட்சனம் டிக்கெட்டுக்களும் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
ஆவின் பாலில் ‘ஈ’: அதிர்ச்சியில் பொதுமக்கள்!