வாட்ஸ்அப் செயலி வாயிலாக திருப்பதி தரிசன டிக்கெட்டுகள்.. ஆந்திர அரசின் அசத்தல் அறிவிப்பு..!
திருமலை திருப்பதி தரிசன டிக்கெட் வாட்ஸ்அப் செயலி மூலம் பெறும் வசதியை விரைவில் கொண்டு வர இருப்பதாக ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் "மன் மித்ரா" என்ற பெயரில் வாட்ஸ்அப் செயலி மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் ஒன்றாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் மற்றும் முன்பதிவுகள் வாட்ஸ்அப் செயலி மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசன டிக்கெட் மட்டுமின்றி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான அனைத்து சேவைகளும் வாட்ஸ்அப் செயலி மூலம் கிடைக்கும் என்று ஆந்திரா அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் இனி தரிசன டிக்கெட் பெறுதல், தங்கும் அறைகள் முன்பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் வாட்ஸ்அப் செயலி மூலம் செய்யலாம்.
இந்த அறிவிப்பினால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Siva