செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:32 IST)

டெல்லி உயிரியல் பூங்கா மர்மமான முறையில் உயிரிழந்த புலி: கொரோனா காரணமா?

டெல்லி உயிரியல் பூங்கா மர்மமான முறையில் உயிரிழந்த புலி
கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக விலங்குகளுக்கும் பரவி வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில் டெல்லியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் 14 வயது புலி ஒன்று மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது.
 
ஏற்கனவே இந்த புலிக்கு சிறுநீரக பிரச்சனை உள்ளது என உயிரியல் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ள நிலையில் இந்த புலிக்கு கொரோனா வரைஸ் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்த புலியின் இரத்த மாதிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து உயிரியல் பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியபோது, ‘14 வயது கல்பனா என்ற இந்த புலி கடந்த புதன் மாலை 6.30 மணிக்கு உயிரிழந்ததாகவும், மறுநாள் மிகச்சில ஊழியர்களுடன் இந்த புலி புதைக்கப்பட்டதாகவும் கூறினார். 
 
ஏற்கனவே அமெரிக்காவில் புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் புலி ஒன்று மர்மமான முறையில் பலியாகியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது