செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2020 (20:10 IST)

500ஐ தாண்டிய பலி எண்ணிக்கை: இந்தியாவை ஆட்டுவிக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் கடந்த சில வாரங்களாக அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
 
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியாவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 559 ஆக அதிகரித்துள்ளது என்றும் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 656 ஆக உயர்ந்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
குறிப்பாக டெல்லியில் மட்டும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து உள்ளது என்றும் டெல்லியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் 2000ஐ தாண்டியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நான்கு வட இந்திய மாநிலங்களிலும் 2000ஐ நோக்கி நகர்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது 
 
குறிப்பாக மேலும் மும்பையில் தமிழர்கள் வாழும் பெரும் பகுதியாக இருக்கும் தாராவியில் இன்று மட்டும் 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அந்தப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 568 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் தாராவியில் மட்டும் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது