1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 16 ஏப்ரல் 2020 (20:54 IST)

தப்லீக் ஜமா அத் அமைப்பினருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு !

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற மத வழிபாட்டில் கூட்டத்தில் ஆயிரக்காணவர்கள் கலந்துகொண்டனர். அதில் கலந்துகொண்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஊர் திரும்பிய காஷ்மீர் இஸ்லாமிய குரு ஒருவர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார். கூட்டம் முடிந்த பிறகும் மசூதிகளில் தங்கியிருந்தவர்களை மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் பலருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த கூட்டத்தை நடத்திய இஸ்லாமிய அமைப்பு மற்றும் தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலைஒயில் , தப்லீக் தமாஅத் அமைப்பினருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு செய்துள்ளது.

 
இந்நிலையில், தப்லீக் ஜமா அத் அமைப்பிற்கு வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக நிதி வந்ததா என்பது குறித்து தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.