செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2017 (17:39 IST)

மூன்று வயது குழந்தையை இலையில் இரண்டரை மணி நேரம் கட்டி வைத்த கொடூரம்..

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, மூன்று வயது குழந்தையை இரண்டரை மணி நேரம் கட்டித்த வைத்த சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.


 

 
பொதுவாக கிருஷ்ண ஜெயந்தியின் போது, ஆண் குழந்தைகளை கிருஷ்ணர் போல் வேடமிட்டு அழகு பார்ப்பது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நடக்கும் நிகழ்வுதான். ஆனால், கேரளாவின் கண்னூர் பகுதியில், மூன்று வயது சிறுவனை கிருஷ்ணர் போல் அலங்காரம் செய்து, செயற்கையாக தயாரிக்கப்பட்ட அரசமர இலையில் சில மணி நேரங்கள் கட்டி வைத்துள்ளனர். சுமார் இரண்டரை மணி நேரம் அந்த குழந்தை அந்த இலையில் தொங்கியபடியே இருந்துள்ளது.
 
இதைக் கண்ட நபர் ஒருவர், அதைப் புகைப்படம் எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதோடு, முதலில் நான் அதை சிலை என நினைத்தேன். ஆனால், சிறுவனின் கால் அசைந்த போதுதான் அது நிஜமான குழந்தை எனக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதுபற்றி அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது யாரும் சரியாக பதிலளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதுபற்றி எந்த புகாரும் வரவில்லை. அப்படி வந்தால், உரிய நடவடிக்கை எடுப்போம் என அந்தப் பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.