முன்னாள் காதலருக்குத் தூதுவிட்ட நம்பர் நடிகை!!
பெரிய நம்பர் நடிகை, தனக்கு உதவச் சொல்லி முன்னாள் காதலர் ஒருவருக்குத் தூது அனுப்பியுள்ளாராம்.
15 வருடங்களாக ஹீரோயினாகவே நிலைத்திருக்கும் பெரிய நம்பர் நடிகை, கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தை அவரே தயாரிக்கவும் செய்துள்ளார். ஆனால், அந்தப் படத்தை ரிலீஸ் செய்வதில் ஏகப்பட்ட சிக்கல்கள்.
படத்தை வாங்கி வெளியிட விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால், தங்களுக்கு கால்ஷீட் தரவேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. இதனால் தவித்துவரும் நடிகை, உதவச்சொல்லி தன்னுடைய முன்னாள் காதலர்களில் ஒருவரான நடனத்துக்கு தூது அனுப்பியிருக்கிறாராம். பழைய பாசத்தில் நடனம் உதவி செய்வாரா என்பதுதான் கோடம்பாக்கத்தின் கேள்வியாக இருக்கிறது.