1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (09:28 IST)

கொரோனா நிதி திரட்ட 40 சதவீத வரி: பரிந்துரை செய்த அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிக்கை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்ட பணக்காரர்களிடம் இருந்து மட்டும் அடுத்து வரும் 6 மாதங்களுக்கு 40 சதவீதம் வரை வசூலிக்க வேண்டும் என பரிந்துரை செய்த மூன்று அதிகாரிகளுக்கு நிதித்துறை அமைச்சகம் குற்றப் பத்திரிக்கையைத் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நாட்டில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் கொரோனாவுக்கு எதிரான போரில் கோடிக்கணக்கில் அரசு செலவு செய்து வருகிறது. இதனையடுத்து பிரசாந்த் பூசன், பிரகாஷ் துபே, சஞ்சய் பகதூர் ஆகிய 3 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் பணக்காரர்களிடம் இருந்து மட்டும் 3 முதல் 6 மாதங்களுக்கு 40% வரி வசூல் செய்யலாம் என பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையால் மத்திய நிதியமைச்சகம் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது
 
இதன்படி இந்த பரிந்துரையை செய்த பிரசாந்த் பூசன், பிரகாஷ் துபே, சஞ்சய் பகதூர் ஆகிய 3 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டியவர்கள் ஆகியோர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூடுதல் வரி உயர்வை பரிந்துரை செய்ததாக அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மூவருக்கும் குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டு உரிய விளக்கம் தர கெடு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.