செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 11 ஏப்ரல் 2020 (19:55 IST)

அத்தியாவசிய மருந்துகள் போதிய கையிருப்பு உள்ளது - பிரதமர் மோடி

நாட்டில் கொரோனா தடுப்பில் இருந்து மக்களைப் பாதுக்காக்க, ஊரடங்கை பிறப்பித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இன்று இரவு அவர், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாட்டுமக்களிடம் உரையாக உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில்  மருத்துவர்கள் உள்ளிட்டோர் மீது சில இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து, இன்று மாநில  முதல்வர்களுடன் நடந்த காணொளி ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி, 
 
ஊரடங்கின் பலன்களை கணக்கிட அடுத்த 4 வாரங்கள் மிக முக்கியமான காலம் என கூறி,  சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை முதல்வர்கள் உறுதிப்படுத்த பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையால் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.  அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும் ,  நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.