இன்று இரவு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் !
இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது. அதில் பல மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் கொரோனாவை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், வரும் 14 ஆம் தேதிவரை இருந்த ஊரடங்கு உத்தரவை வரும் 30 ஆம் தேதிவரை நீட்டிக்குமாறு மாநில முதல்வர் கேட்டுக்கொண்டதற்கிணங்கு மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.