திருட வந்த இடத்தில் திருடன் தூக்கிட்டுத் தற்கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிவிட்டு அந்த நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் இந்திய நகர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஐஷ்ராமி. இவர் கடந்த வாரம் குடும்பத்துடன் வெளியூர் சுற்றுலா சென்றிருந்தார். சுற்றுலாவை முடித்துவிட்டு, நேற்று அனைவரும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் ஒரு நபர் தூக்கில் தொங்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த நபர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார் என்றும், அவர் திருடுவதை வழக்கமாக வைத்திருப்பதாகவும், இந்த வீட்டில் திருடவந்தபோது, சாமிகும்பிவிட்டு, தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸார் விசாரணையில் தகவல் வெளியாகிறது.