மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட ஆசிரியர்!
உத்தரபிரதேசம் மாநிலம் மிர்ஸபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அதிக குறும்பு செய்வதாகக் கூறி 2 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்டார் ஒரு ஆசிரியர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் பள்ளிக்கு வராத மாணவனை எட்டி உதைத்தது பெரும் சர்ச்சையானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.