1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (10:52 IST)

ஆசிரியர்கள் நேரடி நியமனம் வயது வரம்பு உயர்வு! – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான வயது உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆகவும், ஓய்வு பெறும் வயது 58 ஆகவும் இருந்தது. பின்னர் பணியாளர்களின் ஓய்வுக்கான வயது வரம்பு 60 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால் அதேசமயம் பணி நியமத்திற்கான உச்ச வரம்பு 40 வயதாக குறைக்கப்பட்டது.

இதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் இடையே எதிர்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சவரம்பு சிறப்பு நிகழ்வாக 2022ம் ஆண்டு டிசம்பர் வரை மட்டுமே அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதற்கு பிறகு பொதுப்பிரிவினருக்கு உச்சவரம்பு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு 47 ஆகவும் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.