செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 16 நவம்பர் 2022 (19:51 IST)

ஆட்டோவில் இருந்து கீழே குதித்த மாணவி..வைரலாகும் வீடியோ

maharashtra
மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆட்டோ ரிக்ஷாவில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் ஒரு ஆட்டோ ரிக்சாவில் பயணித்துள்ளார் ஒரு சிறுமி.

அப்போது, அந்த ஆட்டோ ஓட்டுனர் சிறுமியை மானபங்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, அவரிடமிருந்து தப்பிக்கும்   நோக்கில், அந்தச் சிறுமி வேகமாகச் சென்ற  ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அந்த சிறுமியில் நெரிசல் மிகுந்து பகுதியில் குதித்ததால், அவரை மீட்ட மக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  தற்போது ஆட்டோ டிரைவர் சையத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

மாணவி ஆட்டோவிலிருந்து குதிக்கும் வீடியோ பரவலாகி வருகிறது.

Edited by Sinoj