தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவி சுட்டுக்கொலை!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இம்மா நிலத்தின் ஜலாவுன் மாவட்டம் அயிட் நகரில் வசித்து வந்த மாணவி ரோஷ்ணி(21 வயது). இவர் அங்குள்ள கல்லூரியில் பிஏ படித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று கல்லூரியில் செமஸ்டர் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த சாலையில் பைக்கில் வந்த 2 பேர் ரோஷ்ணியை துப்பாக்கியால் சுட்டனர். இதில், சம்பவ இடத்திலேயே ரோஷ்ணி ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார்.
மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, உடனே பைக்கில் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பியோடினர். இதுகுறித்து, போலீஸார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.